இலங்கை கிரிக்கெட் புதிய யாப்பை தயாரிக்க குழு நியமிப்பு

இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பினை தயார் செய்து வழங்குவதற்கான 10 பேரடங்கிய குழுவொன்றினை விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரண்சிங்க நியமித்துள்ளதாக அமைச்சரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அண்மையில் விளையாட்டு துறை அமைச்சினால் இலங்கையின் விளையாட்டு அமைப்புகளுக்கான சட்ட திட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டு அது வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலான புதிய யாப்பினை தயார் செய்து இரெண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டுமென இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் KT சித்ரஸ்ரீ தலைமையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பர்வீஸ் மஹ்ரூப், சரித் சேனநாயக்க ஆகியோர் அடங்கலாக துமிந்த ஹுளங்கமுவ, பேராசிரியர் அரித்த விக்ரமநாயக்க, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ரேணுகா ரோவேல், தீப்தி குலசேன, கயால் கலட்டுவாவ, ஹரிகுப்த ரோஹணதீர ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவின் பிரகாரமே இந்த யாப்பு சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், சர்வதேச ரீதியில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவைக்கு உட்பட்டு ஏனைய நாடுகளில் பின்பற்றப்படுகின்ற யாப்புகளை ஒத்ததாக இந்த திருத்தும் மேற்கொள்ளப்படவுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

நியமிக்கப்பட்டுள்ள இந்த சுயாதீன குழு உரியவர்களிடம் சரியான ஆலோசனைகளை பெற்று, நேர்மையாக சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தொழில் நுட்பக்குழுவின் உதவிகளோடு இதனை தயாரிப்பார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் புதிய யாப்பை தயாரிக்க குழு நியமிப்பு
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply