அறநெறி ஆசிரியர்களுக்கு உதவி

வவுனியா, சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால், அறநெறி ஆசிரியர்களாக சேவை செய்பவர்களுக்கு நிவாரண பொதிகளும் ஊக்குவிப்பு கொடுப்பனவுவம் நேற்று (05.10) சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தில்
வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கோவில் குளம் முதல் சிதம்பரபுரம் வரையிலான தற்போது இயங்கி கொண்டிருக்கும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு உலர் உணவு பொதி மற்றும் விஷேட கொடுப்பனவாக 500 ரூபாவும் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மற்றைய பகுதிகளை சேர்ந்த அறநெறி ஆசிரியர்களுக்கு நிவாரண உதவி மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவு என்பனவும் வழங்கப்படவுள்ளன.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்க உறுப்பினர்கள், குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு கந்த கணேசதாஸக் குருக்கள், ஓய்வுபெற்ற கல்வியற்கல்லூரி பீடாதிபதி ஸ்வர்ண ராஜா, கலாசார உத்தியோகத்தர்கள், வவுனியா வடக்கின் கலாச்சார உத்தியோகத்தர் குகனேஸ்வரசர்மா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமானது அண்மைக் காலமாக கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகிறது.

Social Share

Leave a Reply