அமெரிக்காவில் ஏற்டபட்டுள்ள பனிப்புயல் காரணமாக, சர்வதேச ரீதியில் 6,000 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சில விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பல மாநிலங்களில் வாழும் மக்களுக்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் சுமார் 945,000க்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி இருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
