இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் G20 நாடுகளின் நிதியமைச்சர்களின் கூட்டத்தை முன்னிட்டு, அமெரிக்க மற்றும் சீன தூதுக்குழுக்கள் மட்டத்திலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கையின் கடன் நெருக்கடி மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை உள்ளிட்ட குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்கும் சீனாவின் பின்தங்கிய கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.