மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

நாட்டின் மழையுடனான காலநிலை இன்று சிறிதளவு அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்த்தி பதிவாககே கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைப்பதற்கு பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply