தம்புத்தேகமவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

நேற்று (27.02) தம்புத்தேகம – பாதெனிய அநுராதபுரம் பிரதான வீதியில் அரியாகம பிரதேசத்தில் அனுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தின் பின் பக்கத்தில் பொதிகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவர் மீது, அனுராதபுரத்தில் இருந்து தம்புத்தேகம நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்வனேகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கெப் வண்டியின் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தம்புத்தேகமவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply