வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மோதலில் பொலிசார் உட்பட 10 பேர் காயம்!

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ள விடாமல் தடுத்ததால் ஏற்பட்ட மோதலை அடுத்து எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

வீரகெட்டிய, கொனதெனிய பகுதியில் சட்டவிரோத மதுபான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அத்தனயால வீதியில் இருந்த சிலரை வீரகட்டிய பொலிஸ் அதிகாரிகள் குழு சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனையின்போது ஒரு குழுவினர் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததால், அவர்கள் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததால் அது மோதலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனயால பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் அந்த இடத்திற்கு ஒன்று திரண்ட பின்னர் ஏற்பட்ட மோசமான நிலையை கட்டுப்படுத்த மேலதிகமாக பொலிஸார் மற்றும் STF அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

மோதலின்போது குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் பொலிஸ் துணை ஆய்வாளர் ஒருவரின் இரு காதுகளையும் கடித்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயத்திற்குள்ளான துணை ஆய்வாளர் சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோதலில் காயமடைந்த ஏனைய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மோதலில் பொலிசார் உட்பட 10 பேர் காயம்!

Social Share

Leave a Reply