அரசு ஊழியர்களின் விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அத்தியாவசிய பொது சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொது சேவையாக நியமிக்கப்பட்ட புகையிரத சேவைகள் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
27.02.2023 திகதியிடப்பட்ட அரசாங்கத்தின் அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2321/07 இன் மூலம் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் இலங்கை புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன், 1979ம் ஆண்டின் 61ம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2ம் பிரிவின் படி, இது அத்தியாவசியமான பொது சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 14.03.2023 முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை புகையிரத சேவைகள் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் ரத்து செய்ய புகையிரத சேவைகள் திணைக்களத்தின் பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.