மேல் மாகாணத்தில் நாளை (15.03) நடைபெறவிருந்த பாடசாலை தவணைப் பரீட்சைகளை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (15.03) நடைபெறவிருந்த 10ம் மற்றும் 11ம் தர தவணைப் பரீட்சைகள் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறவுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
மாணவர்கள் நாளை பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஏற்படக்கூடிய போக்குவரத்து இடையூறுகளை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.