எதிர்வரும் மாதம் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் டிசெம்பர் மாதம் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கச்சா எண்ணெயின் விலை குறைவடைந்து வருவதுடன் ரூபாயின் பெறுமதியும் வலுவடைந்து வருவதால், கணிசமாக குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளார் எனவே நாங்கள் அந்த சலுகைகளை நிச்சயம் வழங்குவோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.