விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் உயர் திறமை கொண்ட விளையாட்டு வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று (21.03) விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் இடம்பெற்றது.
விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு தனித்துவமானது என சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த கலந்துரையாடலின் பின்னர், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியலாளர்களிடமும் விளையாட்டு துறையின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதுடன், அபிப்பிராயங்களை பகிர்ந்துகொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.



