ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் எட்டு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த அறிவிப்பின்படி, தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப்பின்னரான ஆறு ஆண்டுகள் என மொத்தமாக எட்டு ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பயன்படுத்தி அவதூறாக பேசியதை தொடர்ந்து குஜராத் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்ததை தொடர்ந்து, நேற்று அவரது நாடாளுமன்ற உறுப்பினா் பதவி பறிக்கப்படது, இந்நிலையில் அவர் தற்போது தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.