இடையூறு விளைவிக்கும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை!

நாட்டில் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனையை தொடர்ந்தும் வழமைபோல் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, எரிபொருள் விநியோக கடமைகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுத்து, எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களை கட்டாய விடுமுறையில் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் வழமைபோல் தங்கள் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மற்றும் பிற சேவைகளை தொடருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply