தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறியுடன் வேன் மோதியதால் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் உட்பட மூவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையிலிருந்து கடவத்தை நோக்கிச் சென்ற லொறியுடன் வான் மோதியதில், வேனின் சாரதியான 25 வயதுடைய நபர் மற்றும், அதில் பயணித்த 59 வயதுடைய ரஷ்யப் பெண் மற்றும் ஆண் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விபரங்களை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply