ஹம்பாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவர் ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரால் நேற்று(30.03) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை முடிந்து சிறுமி வீடு திரும்பத் தாமதமானதால், பெற்றோர் பாடசாலை அதிபரிடம் விசாரித்தபோது, அன்றைய தினம் சிறுமி பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லையென கூறப்பட்டது.
பெற்றோர் சிறுமியைத் தேடிச்சென்ற போது, பாடசாலை செல்லும் வழியில் ஒரு கார் சிறுமியை ஏற்றிச்சென்றதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிறுமி வீடு திரும்பியுள்ளார், சிறுமியிடம் பெற்றோர் மேற்கொண்ட விசாரணையில், குறித்த ஆசிரியர், செவ்வாய்க்கிழமை 28/03/2023 காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை பாடசாலையில் இறக்கி விடுவதாகக் கூறி, காரில் ஏற்றி, பின்னர் விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபரான ஆசிரியர் ஹம்பாந்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர்,ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்
