சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நேற்று (30.03) இரவு 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.
சான்ட்டியாகோ நகரின் தென்மேற்கே சுமார் 328 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இது வரை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.