மது போதையில் கைது செய்பவர்களுக்கு பிணை மறுப்பு தொடர்பில் முடிவில்லை

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு,பொலிஸ் பிணை வழங்கும் நடை முறையை இடைநிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் செலுத்தி, கைது செய்யப்பட்ட சாரதிகளுக்கு பொலிஸ் பிணை வழங்குவதை நிறுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாமல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அண்மைய நாட்களாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து அவர் கருத்து தெரிவித்த போது,
வழங்கப்பட்ட மாதிரியின் வகை மற்றும் மூச்சுப் பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்து,
குறிப்பிட்ட குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு பிணை வழங்கப்படுவது அல்லது மறுக்கப்படுவது தொடர்பில், தீர்மானிக்க அந்தந்த காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மது போதையில் கைது செய்பவர்களுக்கு பிணை மறுப்பு தொடர்பில் முடிவில்லை

Social Share

Leave a Reply