மட்டக்குளிய பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினரால் நேற்று (30.03) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்குளி, களனி கங்காமில்ஸ் வீதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த குழுவொன்று, குறித்த நபரை அவரது வீட்டுக்கு முன்பாக கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.