மீன்களின் விலைகளில் வீழ்ச்சி!

எரிபொருள் விலை குறைப்பினால் மீனவர்களும் நன்மை அடைந்துள்ளதால் மீன்களின் விலைகளை 25 % வீதத்தால் குறைக்க முடியும் என பேலியகொட மீன் வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்துள்ளார்.

விசைப்படகுகள் மூலம் தொலைதூரக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் படகுகள் மூலம் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளின் எரிபொருள் தேவைக்கு செலவிடும் தொகை குறைவதால் மீன்களின் விலை குறையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு மாகாணங்களுக்கு பாரவூர்திகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மீன்களை விநியோகிப்பதற்கு தேவையான எரிபொருளுக்கான செலவு குறைவடைந்துள்ளதால், அதற்கான சலுகையை மக்களுக்கும் வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply