இலங்கையுடனான தொடரை வென்றது நியூசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இன்று (31.03) ஹமில்டனில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சரவதேசப்போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிசங்க 57(64) ஓட்டங்களையும், தசுன் ஷானக 31(36) ஓட்டங்களையும், சாமிக்க கருணாரட்ன 24(42) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மட் ஹென்றி, ஹென்றி ஷிப்லி, டேரில் மிச்செல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த பின்னர் வில் யங், ஹென்றி நிக்கொல்ஸ் ஆகியோர் 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர்.

இதில் வில் யங் 86(113) ஓட்டங்களையும், ஹென்றி நிக்கொல்ஸ் 44(52) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்களையும், கசுன் ராஜித, தசுன் ஷானக ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக வில் யங் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையுடனான தொடரை வென்றது நியூசிலாந்து

Social Share

Leave a Reply