தளபதி விஜய்யின் இன்ஸ்டாகிராம் அறிமுகம் புதிய சாதனை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் நேற்று மாலை 4 மணியளவில் இன்ஸ்டாகிராமில் தனது புதிய கணக்கைத் ஆரம்பித்திருந்தார், கணக்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணி நேரத்திற்குள், 1 மில்லியன் பின்தொடர்பவர்களை (followers) எட்டியுள்ளது.
BTS பாடகர் V மற்றும் ஏஞ்சலினா ஜோலி ஆகியோருக்குப் பிறகு, 1 மில்லியன் பின்தொடர்பவர்களைத் தாங்கிய உலகளவில் மூன்றாவது வேகமான Instagram கணக்கு இதுவாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
@actorvijay எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இன்ஸ்டாகிராம் கணக்கு தற்போது 4.2 மில்லியன் பின்தொடர்பவர்களை (followers) தன்னகத்தே கொண்டுள்ளது.