நிலநடுக்கங்கள் குறித்து உடனடியாக அதிக அவதானம் செலுத்த வேண்டும் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய நில அதிர்வு பரிசோதனை கருவிகள் பொருத்தப்பட வேண்டும் எனவும், கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து உடனடியாக அதிக அவதானம் செலுத்த வேண்டும் எனவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பை அண்மித்த பகுதிகளில் ஏற்படக்கூடிய பாரதூரமான அதிர்வுகள் தொடர்பில் கணிப்புகளை மேற்கொள்வதன் மூலம் ஆபத்து நிலைகளைத் தவிர்க்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பயப்படவோ பதற்றப்படவோ வேண்டிய சூழ்நிலை இல்லை எனவும், அதனை ஆராய்வதே முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.