உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்!

இலங்கையில் அண்மையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டதற்கு அமைய சில உணவுப் பொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இன்று (05.04) நள்ளிரவு முதல் உணவு பொதி (சோற்றுப் பொதி), கொத்து மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 வீதத்தால் குறைக்கப்படும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சாதாரண தேநீர் கோப்பையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் பால் தேநீர் ஒரு கோப்பை 90 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply