தேவையான அளவு திரிபோஷா பொதிகள் வழங்கப்பட்டுள்ளன!

ஏப்ரல் மாதம் வரையில் தேவையான 19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத தெரிவித்துள்ளார்.

உலக உணவு ஸ்தாபனத்தினால் திரிபோஷாவிற்கு உற்பத்திக்கு தேவையான 11200 மெற்றிக் தொன் சோளமும் 350 மெற்றிக் தொன் சோயாபீன்களும் வழங்கப்பட்டதையடுத்து உற்பத்திகள் துரிதப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் திரிபோஷா பொதிகளின் மாதாந்தத் தேவை 19 இலட்சமாக இருப்பதுடன், நாடு முழுவதும் வாழும் அனைத்து கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களால் வழங்கப்படும் திரிபோஷா பொதிகள் தேவையான அளவு கையிருப்பை வழங்க தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத தெரிவித்துள்ளார்.

 

Social Share

Leave a Reply