ஊவா, மத்திய, தெற்கு, சப்ரகமுவ, மேல், வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்று (05) மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், சில இடங்களில் 50 மி. மீ க்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வில், இம்மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேர் கோட்டில் சூரியன் காணப்படுவதுடன் இன்று 12:13 மணியளவில் தல்பே, வெலிபிட்டிய மற்றும் திஹகொடவை ஆகிய பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.