பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நியாயமானதல்ல என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பேக்கரி உரிமையாளர்களுக்கும் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் கிடைக்கவில்லை எனவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (07.04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.