ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தான் அரசாங்கத்துடன் சேர மாட்டேன் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் A.H.M பௌசி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை மீட்க சிறப்பாக செயற்படுகிறார். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமன்றி மக்களுக்கு அவ்வாறே கருதுகின்றனர் என பௌசி கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் திட்டங்களை போற்றுவதாகவும், அவர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாகவும் ஊடங்கள் சில தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக A.H.M பௌசி நியமிக்கப்பட்ட நிலையில் அவர் அரசாங்கத்துடன் இணையும் வாய்ப்புகள் தொடர்பில் கோரிய வேளையில், அதற்கான வாய்ப்புகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
