எட்டாவது உலக பூப்பந்தாட்ட தொடர் இன்று(08.04) சுவிற்சலாந்து, பென் நகரில் ஆரம்பித்துள்ளது. சுவிற்சலாந்து, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இலங்கை, பெல்ஜியம், ஜேர்மனி, சுவீடன், நோர்வே, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பின்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பூப்பந்து வீர வீராங்கனைகள் 250 இற்கும் மேற்பட்டவர்கள் இந்த தொடரில் பங்கு பற்றியுள்ளனர்.
100 வயதுக்கு உட்பட்ட பிரிவு முதல், 60 வயது பிரிவுகள் வரை பல்லேறு விதமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று இந்த தொடர் கோலாகலமாக ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. நாளை 09 ஆம் திகதி இந்த தொடர் நிறைவாடையவுள்ளது.
உலக தமிழர் பூப்பந்தாட்ட தொடருக்கு வி மீடியா ஊடக அனுசரணை வழங்கியுள்ளது.

