மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த பருவகாலத்தின் வேகமான சதத்தினை அஜிங்கையா ரெஹானே பெற்றுக் கொடுத்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியினை பெற்றுக் கொடுத்தார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. மும்பை அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்துள்ளது.
மும்பை வங்கடே மைதானத்தில் முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் இஷன் கிஷன் 32(21) ஓட்டங்களையும், ரிம் டேவிட் 31(22) ஓட்டங்களையும் பெற்றனர். திலக் வர்மா 22(18) ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 21(13) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவீந்தர் ஜடேஜா 3 விக்கெட்களையும், டுஸார் டேசபந்தே. மிற்செல் சென்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் அஜிங்கையா ரெஹானே 61(27) ஒட்டங்களையும், ருத்துராஜ் ஹெய்க்வூட் ஆட்டமிழக்க்மால் 40(36) ஒட்டங்களையும் பெற்றனர்.
இஜ்ந்த வெற்றியின் மூலம் சென்னை அணி நான்காமிடத்துக்கு முன்னேறி வந்துள்ளது.
