ராஜஸ்தான் அணி முதலிடத்தில்

ஐ.பி.எல் தொடரின் இன்றைய(08.04) முதற் போட்டியில் ராஜஸ்தான் அணி சிறந்த ஆரம்ப இணைப்பாட்டம் மூலமாக டெல்லி கப்பிடல்ஸ் அணியினை வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஆரம்ப ஜோடி யஷாஸ்வி ஜய்ஸ்வால் 60 (31) ஒட்டங்களையும், ஜோஸ் பட்லர் 79 (51) ஓட்டங்களையும் பெற்று 98 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். மத்திய வரிசை விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட ஷிம்ரோன் ஹெட்மயார் 39(21) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் முகேஷ் குமார் 02 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய டெல்லி கப்பிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் டேவிட் வோர்னர் 65(55) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். லலித் யாதவ் 38(24) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ரெண்ட் போல்ட், யுஸ்வேந்த்ரா செஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

ராஜஸ்தான் அணி முதலிடத்தில்

Social Share

Leave a Reply