பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்குமிடையில் ஐ.பி.எல் தொடரில் இன்று(09.04) நடைபெற்ற போட்டியில் சன்ரைஸ் ஹைதராபாத் அணி 08 விக்கெட்களினால் வெற்றி பெற்று தனது புள்ளிக்கணக்கை ஆரம்பித்தது.
முதலில் துடுப்பாடிய பஞ்சாப் அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழக்க அணி தலைவர் ஷிகர் தவான் தனித்து நின்று துடுப்பாடி ஆட்டமிழக்காமல் 99 ஓட்டங்களை பெற்றார். இறுதி விக்கெட் இணைப்பாட்டம் 55 ஓட்டங்கள். சாம் கரண் 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் மயங் மார்கண்டே 04 விக்கெட்களையும், மார்க்கோ ஜனீசன் உம்ரன் மாலிக் ஆகியோர் தலா 02 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய சன்ரைஸ் ஹைதராபாத் அணி 17.1 ஓவர்களில் 02 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. ராகுல் திருப்பதி 74(48) ஓட்டங்களையும், எய்டன் மார்க்ராம் 37(21) ஒட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர். இருவரும் 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.
பஞ்சாப் அணி 04 புள்ளிகளோடு ஆறாமிடத்துக்கும், ஹைதராபாத் அணி 02 புள்ளிகளோடு எட்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
