ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ராஜித வெளியற்றப்படுவார்?

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன வெளியேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

“ராஜிதவை வைத்திருப்பதில் எந்த பயனுமில்லை” என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

கட்சி விதிமுறைகளை மீறி நடப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்படுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவிப்பு வெளியிட்டு சிறிது நேரத்தில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்குமிடையில் இணைப்பை ஏற்படுத்தும் முகமாக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் S.M மரிக்கார் கோரிக்கை வைத்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ராஜித வெளியற்றப்படுவார்?

Social Share

Leave a Reply