இலங்கை பொருளாதார நிலை தொடர்பில் IMF இன் கருத்து!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணத்திற்கான இலங்கையின் உரிமை தொடர்பாக அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

“முன்பு இல்லாத சவால்களை இப்போது எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஆபத்தில் இருக்கும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு நாம் வழங்கும் ஆதரவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். சமீபத்தில் உக்ரைன் மற்றும் இலங்கைக்கு எங்கள் ஆதரவை வழங்கினோம்.

மிகவும் சவாலான சூழ்நிலைகளை சமாளிக்க அந்த நாடுகள் செயல்பட்டு வருகின்றமையை நாம் நன்கறிவோம், மேலும் அவ்வாறான நாடுகளை ஆதரிப்பதில் பெருமை கொள்கிறோம். ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்ளும் அனைத்து நாடுகளையும் கரவொலி எழுப்பி ஊக்குவிப்போம். துன்பங்களை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் இருங்கள். உங்களுடன் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் IMF உள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply