2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதரண பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாகவும், நாட்டின் பொருளாதார சிக்கல்கள் காரணமாகவும் கடந்த கால பரீட்சைகள் குறித்த காலத்தை விட்டு தற்போது தாமதமாகியே நடைபெற்று வருகிறது.
மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிப்பதாக இருந்த பரீட்சை, மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பித்து, ஜூன் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் தாமதமாவதனால் பாடசாலை விடுமுறையும் பரீட்சசை காலத்துக்கே பின் செல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.
