கொழும்பு, மொறட்டுவை பகுதியில் இராணுவ வான் ஒன்று, வீதியோரத்தில் சென்றுகொண்டிருந்த சைக்கிள் பயணி ஒருவர் மீதும், நடை பாதையில் சென்றவர்கள் மீதும் மோதியதில், சைக்கிள் பயணி ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். காயமடைந்த மூவர் பாணந்துறை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர் 58 வயதான, ஹொரத்துட்டுவ பகுதியினை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து ஏற்பட்டதனையடுத்து வான் நிறுத்தப்பட்டுள்ளது. வான் சாரதியான இராணுவ சிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரதி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
