ATM அட்டைகளை பயன்படுத்தி பணம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 15 ATM அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் ATM இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்க வந்த சிலருக்கு உதவுவதாக கூறி அவர்களின் இரகசிய இலக்கத்தை பெற்றுக்கொண்டு, ATM இயந்திரத்திலிருந்து வரும் பணத்துடன் போலி அட்டையை கொடுத்து, சரியான அட்டையை தன்வசம் வைத்திருந்து பின்னர் பணத்தை எடுத்து சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிலியந்தலை, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான, மஹரகம உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களில் கிடைக்கப்பெற்ற 50 முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (10.04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.