இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாக பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்களினால் தேர்தல் திகதி தீர்மானிக்கப்படுமென தேர்தல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். நீதிமன்றத்தின் நடைமுறைகள் மற்றும் பண ஒதுக்கீடுகளின் அடிப்படையில் திகதி தீர்மானிக்கப்பபடுமென கூறப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்துவதில் பல இடையூறுகள் காணப்படுவதாகவும், தேர்தலை நடாத்துவதற்கான நிதி கிடைக்கவில்லை எனவும், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அப்பாற்பட்ட காரணிகளினாலும் தேர்தலை அறிவித்த திகதியில் நடத்த முடியாமல் போயுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.
