ராஜஸ்தான் முதலிடத்தில்

சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நேற்று (12.04) சென்னையில்
IPL இன் 17 ஆவது போட்டியாக நடைபெற்றது. சென்னை அணி போராடிய போதிலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை . ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் 3 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோஷ் பட்லர் 52(36) ஓட்டங்களையும், தேவ்தட் படிக்கல் 38(26) ஓட்டங்களையும், ஷிம்ரோன் ஹெட்மயர் ஆட்டமிழக்காமல் 30(18) ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 30(22) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள். இலங்கை அணியிலிருந்து நியூசிலாந்து தொடரை நிறைவு செய்துவிட்டு மீண்டும் சென்னை அணியில் இணைந்துகொண்ட மஹேஷ் தீக்ஷண 4 ஓவர்களில் 42 ஓட்டங்களை வழங்கியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் டெவோன் கொன்வே 50(38) ஓட்டங்களையும், MS தோணி ஆட்டமிழக்காமல் 32(17) ஓட்டங்களையும், அஜிங்கய ரஹானே 31(19) ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 25(15) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின், யுஷ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், சந்தீப் ஷர்மா, அடம் சம்பா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவு செய்யப்பட்டார்.

இன்று (13.04) குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையில் IPL இன் 18 ஆவது போட்டியாக பஞ்சாப்பில் நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் முதலிடத்தில்

Social Share

Leave a Reply