புகையிரத தண்டவாளங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானம்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ், சீனாவிலிருந்து 10,000 புகையிரத தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த மாத இறுதியில் இந்த புகையிரத தண்டவாளங்கள் நாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும், மேலும், புகையிரத பாதைகளை பராமரிப்பதற்கு அவசியமான ஆணிகள் உள்ளிட்ட பல்வேறு உதிரிப்பாகங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகளவான கரையோர புகையிரத பாதைகள் உள்ளிட்ட புகையிரத தண்டவாளங்கள் சேதமடைந்துள்ள காரணத்தால் புகையிரதங்களின் பயண வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, புகையிரத தண்டவாளங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், புகையிரத பாதைகளை புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் எனவும், புனரமைக்கும் காலப்பகுதியில் புகையிரதங்களின் பயண வேகத்தை மணிக்கு 30 கிலோமீட்டர் வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply