டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இடம்பெறும் அம்பேத்கர் ஜயந்தி மாபெறும் விழாவிற்கு முன்னாள் அமைச்சர் SMM முஷாரபுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இளம் போராளி டாக்டர் ஆ. சா செல்வராஜாவின் தலைமையில் மானம்பதி மண்ணின் மைந்தர்கள் கழக உடன்பிறப்புக்கள் நடாத்தும் டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாள் விழா வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மாதம்பதி பேரூந்து நிலையத்தில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாக உள்ளன.
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மீன் வளம் கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சர் L. முருகன்,
ஜவுளி மற்றும் ஆடைத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் SMM முஷாரப், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்திகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் SMM முஷாரப் நாளை (14.04) இந்தியா பயணமாகிறார்.