ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்நாள், இந்தியா, டெல்லி பிராந்திய முகாமையாளர் லலித் டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய முடியாதவாறு கைது செய்யுமாறு இந்தியா, டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் இந்தியா, டெல்லி அலுவலகத்தில் கடமையாற்றிய இந்திய பெண் ஒருவரின் சுயஒழுக்கத்தை கேலி செய்தமைக்கு அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் லலித் டி சில்வா வழக்கிற்கு செல்லவில்லை.
கொவிட் காரணமாக அவரால் சமூகமளிக்க முடியாமல் போனாலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை இந்திய நாடுகளுக்கிடையில் விமான சேவை நடைபெற்று வருகிறது. அவரால் வழக்கிற்கு சமூகமளித்திருக்கு முடியும்.
இந்த காலத்தில் லலித் டி சில்வா இந்தியா வருகைக்கான விசாவினை பெறவுமில்லை. ஆகவே அவர் நீதிமன்றத்துக்கு வருவதை தவிர்த்து வருகிறார். ஆகவே அவரை பிணை வழங்காதபடி கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
