விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பொஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இன்றைய தினம் ஆறாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
பிக்பொஸ் நிகழ்ச்சியின் புதிய மாற்றமாகவும், திருநங்கைகளுக்கு ஒரு முன்னோடியாகவும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் நமீதா மாரிமுத்து.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரம்ப நாளிலேயே தான் பிக்பொஸ் வெற்றியாளராக வருவேன் எனவும் அவ்வாறு தான் வெற்றி பெறுவது தன் சார் சமூகத்தினருக்கு பெரும் ஊக்குவிப்பாகவும், அங்கீகாரமாகவும் அமையும் எனத் தெரிவித்திருந்த அவர், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களையும் பகிர்ந்திருந்ததுடன் பல இரசிகர்கள் அவருக்கு ஆறுதலாகவும், சார்பாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் நமீதா மாரிமுத்து தானாகவே பிக்பொஸ் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக பிக்பொஸ் தொடர்பில் டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுவரும் நபர் ஒருவர் நமீதா வெளியேறியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் ப்ரமோ வீடியோவிலும் நமீதா மாரிமுத்து இல்லை என்பதனால் இத்தகவல் உண்மையாக இருக்கலாம் என சில ஊடகங்களில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
பிக்பொஸ் ஆரம்பித்து ஒருவாரம் கூட முடிவடையாத நிலையில் இவர் வெளியேறியுள்ளதுடன் இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

