இன்று மதியம் 12.10 அளவில் சூரியன் யாழ்ப்பாணம், நல்லூர் மாற்றும் சுண்டிக்குளம், பரந்தன் ஆகிய பகுதிகளில் உச்சம் கொடுக்கவுள்ளதாக வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் 05 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையாக சூரியன் வருகை தந்துள்ளமையினால் கடும் வெப்பமான வாநிலையினை இலங்கை பூராகவும் உணரக்கூடியதாக காணப்பட்டது.
வடக்கிலும், கிழக்கிலும் வெப்பத்தின் பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. மழை இல்லாத சூழ்நிலையில் மேலும் வெப்பம் அதிகமாக காணப்படுவதாக மக்கள் கூறி வருகின்றனர்.
இனி வரும் காலங்களில் இந்த வெப்பம் படிப்படியாக குறைவடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.