மஹவிலச்சிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளக்கட்டு பகுதியில் காட்டு யானை தாக்கி 68 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மஹவிலச்சிய ஏரியில் மீன்பிடித்துவிட்டு வீடு திரும்பும் போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தம்புத்தேகம – தெல்ஹிரிய பிரதேசத்தில் நேற்று (13.04) இரவு காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகளின் காணிக்கு வந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போது, தாக்குதலுக்கு உள்ளாகி மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெல்ஹிரியாவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவிலச்சிய பொலிஸார் மற்றும் தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.