புத்தாண்டின் நிமித்தம் உறவினர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று இன்று (14.04) பதிவாகியுள்ளது.
தீயினால் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகம பிரதேசத்தில் வசிக்கும் குடும்பத்தினர் அகலவத்தை பகுதியில் உள்ள தமது உறவுகளை சந்திக்க சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.