நாற்குழந்தைகள் இன்று பிறந்தன.

இன்று பேராதனை போதான வைத்தியசாலையில் குருநாகலை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. பிறந்துள்ள மூன்று ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1.1 கிலோ கிராம் மற்றும் 1.0 கிலோகிராம் எடையுடைய குழந்தைகள் விசேட சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளன. நான்கு குழந்தைகளையும் சிறப்பு நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர். “குழந்தைகளை அன்பாகவும், பொறுப்பாகவும் வளர்த்து எடுப்பேன்” என குழந்தைகளின் தகப்பனான புத்திக்க ஹேரத் தனது சந்தோசத்தை வெளியிட்டுள்ளார்.

நாற்குழந்தைகள் இன்று பிறந்தன.

Social Share

Leave a Reply