இரத்தினபுரி மாவட்டத்தில் காசநோய் அதிகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
காசநோய் தடுப்பு தொடர்பான பொது விழிப்புணர்வு நிகழ்வில் நேற்று (16.04) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களிடையே காசநோய் பற்றிய அறியாமையும் நோய் பரவலுக்கு காரணமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் இலங்கையில் 331 காசநோயாளர்கள் கண்டறியப்பட்டதுடன் அவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது சுமார் 10 வீதமாக இருப்பது கவனத்திற்குரிய விடயம் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.