அரசில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் – அமைச்சர் விமல்

தற்போதைய அரசாங்கம் மீது மக்கள் அதிகமகா நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அரசாங்கம் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை செய்யாமல், எதிர்பார்க்காத விடயங்களை செய்வதனால் அரசாங்கத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என கைத்தொழில் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையையும், விரக்தியையும், நீக்கி நம்பிக்கையை மக்கள் மனதில் வளர்க்கவேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தான் ன் கூறிய சில கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டவருகின்றன. நான் கூறாத யோசனைகளும் நான் கூறிய யோசனைகளும் தவறாக விளக்கப்பட்டு பரப்பப்பட்டுவருவதனால் அது தொடர்பாக தான் விளக்கமளிக்கின்றேன் என தெரிவித்து குறித்த அறிக்கையினை அவர் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழுள்ள விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டிற்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைச்சரவை ஆவணங்களை ஒரே நாளில் அமைச்சரவைக்கு கொண்டு வந்து அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, அமைச்சரவையில் குறித்த காலப்பகுதியில் நியாயமான விவாதங்களை மேற்கொண்டு அவ் அமைச்சரவை ஆவணங்களை சரியான நேரத்தில் ஏற்றுக்கொள்வது மிகவும் பொருத்தமானது.

இது பின்னய காலங்களில் அரசிற்கு சிக்கலில்லாமல் முடிவுகளை மாற்றத விதத்தில் தீர்மானங்களை எடுப்பதற்கு உதவியாக அமையும்.

ஜனாதிபதி அவர்களும் விரைவில் தீவிரமாக அரசியலில் தலையிட வேண்டும். கூட்டு தீர்மானங்களை எடுப்பதற்காக கட்சித் தலைவர்களின் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொள்வதும் முக்கியமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபடுவது பல பிரச்சினைகளை தீர்க்கும்.

அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே குறித்து நான் எனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன், அவற்றை மாறுபடுத்தி பரப்புவதைத் தவிர்ப்பதற்காக மாத்திரமே நான் இவ்வாறு விளக்கியுள்ளேன். அமைச்சரவையின் பொறுப்பை இவ்விடயம் பாதிக்காது என நான் நம்புகிறேன்.

அரசில் மக்கள் நம்பிக்கையிழந்துள்ளனர் - அமைச்சர் விமல்

Social Share

Leave a Reply