இலங்கை மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான 20-20 பயிற்சி போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.
ஓமான் அணியின் அக்கிப் இல்யாஸ் 59(38) ஓட்டங்களை பெற்றார் பந்துவீச்சில் லஹிரு குமரா 2 விக்கெட்களையும் சமிக்க கருணரத்ன 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணியின் பானுக்க ராஜபக்ச 35(21), சமிக்க கருணரத்ன 35(26) அவிஷ்க பெர்னாண்டோ 33(18), பத்தும் நிசங்க 26(29) ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் மொஹமட் நதீம் 2 விக்கெட்களை கைப்பற்றினார்
ஓமான் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 பயிற்சி போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது
பிரவிக்
தரம் -03
