கொழும்பு, மிரிகானை பகுதியில் வெடி குண்டினை தயாரிப்பதற்கான வெடிபொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவிரனுக்கு கிடைத்த தகவலை அடிப்படையாக வவைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கைது செய்த வேளையில் 75 ஜெலினைட் குச்சிகள், 75KG அமோனியா நைட்ரேட், 107 டெட்டனேட்டர்ஸ், 360 மீட்டர் நுன் இழை நூல் ஆகியன கைப்பற்றபப்ட்டுள்ளன. இந்த பொருட்களை அவர் வேறு நபர்களுக்கு விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக மிரிகானை பொலிசில் கையளிக்கப்பட்டுள்ளார்.
